தனியார் பாலில் ரசாயனம் கலப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மனு
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் உள்பட அனைவருக்கும் பால் முக்கிய உணவு பொருளாக உள்ளது. தனியார் பால் நிறுவனங்கள், பால் கெட்டுப்போகாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைடு, குளோரின் போன்றவற்றை கலப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததை படித்து அதிர்ச்சி அடைந்தேன்.
தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பாலில் ரசாயனம் கலந்திருப்பதை உறுதிசெய்ய 5 மாதங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பது உறுதியாக தெரிந்த பின்பும் அந்த நிறுவனங்கள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
பொதுமக்களின் சுகாதாரத்தை பேணிக்காத்து அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலப்படம் செய்த பாலை அருந்தவேண்டிய கட்டாய நிலைக்கு பொதுமக்களை தள்ளுவது நியாயமற்றது.
எனவே, தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்த தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story