கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் -சீதாராம் யெச்சூரி பேச்சு
கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
கருணாநிதி, 75 ஆண்டுகளாக பத்திரிகையில் எழுதி வருவது சாதனை. கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
தனது எழுத்து, வசனத்தால் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றியவர் கருணாநிதி. இந்திய அரசியல் அமைப்பின் நான்கு தூண்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர் கருணாநிதி. மத்திய பாஜக அரசில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது இளைஞர்கள், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வில்லை.
சவால்களை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு கருணாநிதியின் வழிகாட்டுதல் தேவை. அரசியல் ஆதாயத்திற்காக நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். பல்வேறு நாடுகளில் பாசிச ஆட்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story