கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க கூடாது தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க கூடாது தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் 2000–ம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தது. கடந்த மாதம் 19–ந்தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து, புதிதாக குழாய் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கதிராமங்கலத்தில் மீத்தேன், பாறை படிம எரிகாற்று எனும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு தொடர்ந்து துரப்பணப் பணிகள் நடைபெறுவதும், ஆழ்குழாய்கள் பதிக்கப்படுவதும் அப்பகுதி மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியதால், கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 1, 2–ந்தேதியும் பொதுமக்கள் ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அணி திரண்டனர்.
ம.தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் போலீசாரின் மூலம் பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பது தவறு. கைது செய்யப்பட்டுள்ளோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Related Tags :
Next Story