கருணாநிதியின் இடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்ப வேண்டும் ராகுல் காந்தி பேச்சு
கருணாநிதியின் இடத்தை நிரப்புவதற்கான மிகப்பெரிய பணி மு.க.ஸ்டாலினுக்கு காத்திருக்கிறது என்று ராகுல் காந்தி பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினருடன் இந்த மேடையில் வீற்றிருப்பது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்ததற்கு நன்றி. கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன். அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மக்கள் மீது நேசம்
ஒரு அறிஞர் சொன்னார், நான் மிக அதிகமாக ஒருவரை நேசிக்கிற போது நமக்கு பலம், வலிமை கிடைக்கிறது. ஒருவரால் நாம் ஆழமாக நேசிக்கப்படும் போது துணிச்சல் கிடைக்கிறது என்று அவர் சொன்னார். அந்த வகையில் கருணாநிதி கோடானுகோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாகும். அவரும் மக்களை ஆழமாக நேசிக்கிறார். அவர்களை ஆழமாக நேசிக்கிறதால் கருணாநிதிக்கு மிகப்பெரிய துணிவைத் தருகிறது.
இந்த இரண்டும் இணைந்து, அதாவது வலிமையும், துணிவும் சேர்ந்து அவருக்கு ஞானமாகவும் அறிவாற்றலுமாக திகழ்கிறது.
அவர் தோல்வியை அடையாமல் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்பதற்கு காரணம் உள்ளது. மக்கள் மீது அவர் வைத்திருந்த மிகுந்த ஆழமான நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருந்த நேசமும்தான் அதற்கு காரணம்.
கடிதம்
கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டுமல்லாமல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோர் பேசும்போதெல்லாம் அந்தந்த மாநில மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அமைகிறது. அதுபோலத்தான் மு.க.ஸ்டாலின் பேசும்போதும் அது தமிழர்களான உங்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக அமைகிறது.
கருணாநிதி தினமும் காலையில் கடிதம் எழுதும்போது, உங்கள் பிரச்சினைக்காக, உங்களின் தகவலைப் பெற்று எழுதினார். அவர் வேறு கற்பனைகளில் இருந்து கடிதம் எழுதவில்லை. உங்கள் எண்ணங்களில் இருந்தும், உங்கள் பிரச்சினைகளில் இருந்தும், நீங்கள் சொல்வதில் இருந்தும் அவர் கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடிதம் உங்கள் கருத்துகளில் இருந்து வந்தது.
70 ஆண்டுகளாக அவர் எழுதியபோதெல்லாம், இங்குள்ள தமிழனுக்காக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மக்கள் நலனுக்காக அமைந்திருந்தது. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேடையில் இருக்கும் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு, கலாசாரமெல்லாம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியின் கருத்து
யாரும் நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்ல முடியாது. எனக்கு என்ன வேண்டும், எது நல்லது என்பதை என்னைத் தவிர யாரும் எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது.
ஆனால் இந்தியாவில் எல்லாருமே ஒப்புக்கொள்ளக்கூடிய பொதுவான கருத்து ஒன்று உள்ளது. எல்லா மக்கள் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் அதுபற்றி யாரிடமும் கருத்து கேட்காமலேயே தீர்வுகாண பா.ஜ.க. முயற்சிக்கிறது. பேச்சுவார்த்தை, கலந்தாய்வு என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்புவதெல்லாம் எதிர்த்தரப்பினரின் கருத்தை நசுக்க வேண்டும் என்பதைத்தான்.
பண மதிப்பு இழப்பு
கற்பனை செய்து பாருங்கள், ஒருநாள் காலையில் பிரதமர் முடிவெடுக்கிறார். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களின் பாக்கெட்டில் உள்ள பணம் செல்லாததாக போகிறது என்று சொல்ல முடிவு செய்கிறார். இதற்கு அவர் யாரையும் கேட்கவில்லை. தமிழக முதல்-அமைச்சரையும் அல்லது யாரையும் அவர் கேட்கவில்லை. சர்வாதிகாரிபோல் தனிப்பட்ட முறையில் அவர் முடிவு செய்தார். ஒவ்வொருவரின் பாக்கெட்டில் உள்ள பணமும் செல்லாது என்பது நரேந்திர மோடி என்ற ஒருவரின் முடிவாகவும், அறிவிப்பாகவும் இருந்தது.
பண மதிப்பு இழப்பால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அருண் ஜெட்லி சொன்னார். உலகமே சொல்கிறது, இந்திய பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதென்று. ஆனால் அதை அவர் மறுக்கிறார். பண மதிப்பு இழப்பு பற்றி அருண் ஜெட்லியிடம் கூட பிரதமர் கலந்து பேசவில்லை. இந்த வழியில்தான் இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஏற்கமாட்டோம்
தங்களின் ஒரே கருத்தின் அடிப்படையில் இந்தியா செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு கலாசாரம்தான் இந்தியாவை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை நாங்கள் முற்றிலும் ஏற்கவில்லை. ஒவ்வொரு இந்தியனின் குரலும், கருத்தும் இந்தியாவின் நலனுக்காக கேட்கப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து.
அவர்களின் கருத்தை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற அளவில் செயல்பட நரேந்திர மோடியையோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.சையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்திய மக்களின் குரலை அடக்கும் அவர்களின் செயல்பாட்டை நாங்கள் ஏற்கமாட்டோம். அவர்களின் தவறான எண்ணங்களை செயல்படுத்துவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இடத்தை நிரப்பும் பணி
இந்த கூட்டத்தை நடத்தி அதில் பங்கேற்க என்னை அழைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறேன். ஒரு மிகப்பெரிய பணி அவருக்கு காத்திருக்கிறது. ஒரு மாபெரும் மனிதனின் இடத்தை வருங்காலத்தில் அவர் நிரப்ப வேண்டியதுள்ளது. அவர் சரியான திசையில் பயணிக்கிறார் என்பதை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி. கருணாநிதி போல இப்போது எப்படி பேசுகிறோமோ அதைப்போலவே ஒரு நாளில் மு.க.ஸ்டாலினைப் பற்றியும் பெருமையாக நாம் பேசுவோம் என்பது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story