உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக முதலீட்டாளர் மாநாடு
தமிழ்நாட்டில் அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் பழனிசாமி, கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்வதாக ஒப்புக்கொண்ட நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்கள் இதுவரை முதலீடு செய்துள்ளன. அந்த நிறுவனங்கள் எவை, எவை? என்பதை தெரிவிக்கவில்லை. மாறாக, கடந்த மாநாட்டில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட 98 நிறுவனங்களில் 61 நிறுவனங்கள் ரூ.62,738 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்திய தொழிற் கூட்டமைப்பின் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். முதல்-அமைச்சரின் இந்த புள்ளிவிவரங்கள் ஏற்கனவே வெளியானவற்றுக்கு முரணாக அமைந்துள்ளன.
2015-ம் ஆண்டில் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையே ரூ.19,811 கோடி மட்டும் தான் என்றும், அதில் ரூ.501 கோடி முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும் கடைசி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக அரசு, பொய்யான புள்ளிவிவரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது.
வெள்ளை அறிக்கை
அந்த வகையில் அடுத்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்போவதாகக் கூறுவது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை தான். கடந்த 2015-ம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டைத் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கடந்த மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் எவ்வளவு வந்துள்ளது? அது எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story