காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய ராகுல்காந்தி, தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அப்போது அறிவுறுத்தினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால சட்டமன்ற பணிகள் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ராகுல்காந்தி நேற்று காலை தமிழக, புதுச்சேரி கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண் டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு கருணாநிதியை சந்தித்து விட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அவர் புறப்பட்டார். வரும் வழியில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் கூடி நின்று அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
தொண்டர்களுடன் கைகுலுக்கினார்
இதனை காரில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த ராகுல்காந்தி தனது பாதுகாவலர்களிடம் காரை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி, தொண்டர்கள் நின்றிருந்த பக்கம் சென்றார். அப்போது அவரை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர்.
ராகுல்காந்தி தொண்டர்கள் மத்தியில் தனது கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொண்டர்களுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் 12.39 மணிக்கு அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருடன் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வந்தனர்.
சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல்காந்திக்கு சேவாதள அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கட்சி கொடியையும் ஏற்றிவைத்தார். பின்னர் ராகுல்காந்தி கட்சி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். காமராஜர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ் மக்களை நேசிக்கிறேன்
அதனை தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், அகில இந்திய பொதுச்செயலாளர் சென்னாரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, வசந்தகுமார் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 268 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
தமிழகத்தை, தமிழ் மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்திற்கு வந்தவுடன் நான் எனது சகோதரி பிரியங்காவிற்கு தமிழகத்தை நான் நேசிக்கிறேன் என்று ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். பதிலுக்கு அவர் நானும் தமிழகத்தை நேசிக்கிறேன் என்று பதில் அனுப்பினார். ஏன் இதை சொல்கிறேன் என்றால், என்னுடைய பாட்டி இந்திராகாந்தி, என் தந்தை ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துடன் எங்களுக்கு நெருக்கம் இருக்கிறது. எதிர்பார்ப்பு இல்லாத பிணைப்பு இருக்கிறது.
ஒற்றை கலாசாரம்
தென் இந்திய மக்கள் தங்கள் மாநிலத்தை மிகவும் நேசிக்கிறார்கள். தென் இந்தியர் ஒருவரை பார்த்து, நீங்கள் தென் இந்தியரா? என்று கேட்டால், இல்லை நான் தமிழன் என்கிறார்கள். கேரளா மாநிலத்தவர்களும், ஆந்திரா மாநிலத்தவருகளும் அப்படியே சொல்கிறார்கள். இது மாநிலத்தின் மீதான பற்றை காட்டுகிறது.
இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் கலாசாரம், பண்பாடு, மொழியின் அடிப்படையிலேயே கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இதில் தவறு இல்லை. ஆனால் சிலர் (மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு) ஏற்றுக்கொள்ளாமல் ஒற்றை கலாசாரத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
மோடி எதை பேசினாலும், அது கடவுள் பேசியது போல் என்று கூறி அதனை மக்கள் மத்தியில் திணிக்க பார்க்கிறார்கள். நானும் இந்து தத்துவங்களை படித்து இருக்கிறேன். அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்று தானே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இவர்கள் சமமாக நடத்துகிறார்களா?. சாப்பாடு கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிடிக்கும். சிலருக்கு தந்தூரி சிக்கன் பிடிக்கும். அதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என்று சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது.
அதிகாரம்
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற பெரிய கட்சிகள் இருக்கிறது. தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. தமிழக இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க முடியாத நிலையில், குழப்பத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் மூத்த நிர்வாகிகள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுடன் பழகுங்கள். அப்போது தான் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். இதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
நாம் அதிகாரத்திற்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மக்களை சந்தித்து, பணியாற்றுங்கள். உங்களுடன் பணியாற்ற நானும் தயாராக இருக்கிறேன். ‘அ.தி.மு.க. அதை பேசுகிறார்கள், தி.மு.க. இதை பேசுகிறார்கள், பா.ம.க. இதை சொல்கிறார்கள்’ என்று பார்க்காமல் நம்முடைய கட்சியை பற்றி மட்டும் சிந்தியுங்கள். உங்கள் கட்சி பற்றை செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
பின்னர் ராகுல்காந்தி கட்சி அலுவலகத்தில் புதிய நூலகம் ஒன்றை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து பகல் 1.20 மணியளவில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
யுத்தம்
மத்திய பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த இரண்டும் இந்தியாவை ஒரு ஒற்றை கலாசாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்தியா என்பது ஒரு தலைவர், ஒரு கலாசாரம் என்பதுடன் முடிந்து விடுவது அல்ல. ஆயிரம், இரண்டாயிரம் மொழி, கலாசாரம், பண்பாடுகளை கொண்ட நாடு. தமிழ் மக்கள் தங்கள் கலாசாரத்தின் வழியாக கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதை போல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இது பலவீனம் அல்ல. பலம். இந்த பன்முக தன்மையை பா.ஜ.க. சிதைக்க பார்க்கிறது.
எனவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரு ஒன்றுபட்ட யுத்தத்தை தொடங்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி விட்டன. அதன் அடையாளம் தான் நேற்றைய (நேற்று முன்தினம்) கூட்டம். அத்தனை கட்சிகளும் ஒரு மேடையில் அமர்ந்தோம். நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ். எண்ணம் நிறைவேறாது.
தடுத்து நிறுத்துவோம்
தமிழக அரசை ஆட்டுவிப்பது மட்டுமல்ல, இயக்குவதும் நாம் தான் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அதிகார பொறுப்பில் இருக்க வேண்டும், இந்தியாவில் வாழ வேண்டும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளோ? எதிர் கருத்துகளோ? இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. விரும்புகிறது. நாக்பூரில் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பேச்சுகளை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கருதுகிறது. அவர்களின் இந்த மக்கள் விரோத செயல்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசியல் தொடர்பான கேள்விகளை நிருபர்கள் எழுப்ப முயன்றபோது ராகுல்காந்தி, போதும் நேரம் ஆகி விட்டது என்று கூறி வேகமாக சென்று விட்டார். நிருபர்கள் சந்திப்பு முடிந்து, 2 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ராகுல்காந்தி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story