தமிழக ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
காஷ்மீரில் உயிர் இழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வீரர்
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 147 லைட் ஏடி ரெஜிமெண்ட் ராணுவ வீரர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் ஜி.மணிவண்ணன் கடந்த 3-ந்தேதி அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
ரூ.20 லட்சம்
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜி.மணிவண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த ராணுவ வீரர் ஜி.மணிவண்ணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story