காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சென்னை பெண்
காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை பெண் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள செண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 25). இவர் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கோபாலகிருஷ்ணனுக்கும், செஞ்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு நடக்க இருந்தது. திருமணத்திற்காக இரு வீட்டார் சார்பிலும் திருமண அழைப்பிதழ்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டியில் பெண் அழைப்பு நடத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமக்களை வாழ்த்துவதற்காக இரு வீட்டாரும் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் காலை 8 மணிக்கு 21 வயதுடைய பெண் ஒருவர் திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அங்கிருந்தவர்களிடம், தான் சென்னை செம்மச்சேரியை சேர்ந்த சிட்டிபாபு என்பவரின் மகள் அர்ச்சனா என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து அவர் நானும், கோபாலகிருஷ்ணனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னை திருமண செய்துகொள்வதாக உறுதி கூறினார்.
இந்தநிலையில் எனக்கு தெரியாமல் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இதை தடுத்து நிறுத்தி கோபாலகிருஷ்ணனுக்கும், எனக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அங்கிருந்த கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள், அர்ச்சனாவிடம் மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறினர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு திருமண மண்டபத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம்
இதையறிந்த கோபால கிருஷ்ணனை திருமணம் செய்ய இருந்த பெண்ணின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கோபாலகிருஷ்ணனிடம் ஏன் இப்படி வேறு ஒரு பெண்ணை காதலித்து விட்டு எங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்ய வந்தாய், உன்னாள் எங்கள் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கோபாலகிருஷ்ணனுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அர்ச்சனாவிடமும், கோபாலகிருஷ்ணனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை விசாரணைக்காக விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கோபாலகிருஷ்ணன், அர்ச்சனாவை காதலித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித் தார். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள், அர்ச்சனா ஆகியோருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனிடையே கோபாலகிருஷ்ணனை திருமண செய்ய இருந்த செஞ்சியை சேர்ந்த பெண் திருமணம் நின்ற மனவேதனையில் தனது உறவினர்களுடன் ஊருக்கு திரும்பி சென்றார்.

Related Tags :
Next Story