மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி நிறுவனம், ஆயுதக்கிடங்கு தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை உள்பட பல்வேறு படைத்துறை தொழிற்சாலைகளின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் 143 பாதுகாப்பு தளவாடங்களை தனியாரிடம் ஒப்படைத்து, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு படைத்துறை தொழிற்சாலைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வருகிற 22–ந்தேதி கொடும்பாவி எரிப்பு போராட்டமும், 28–ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மூலமாக பிரதமருக்கு மனு அனுப்புதல் மற்றும் ஜூலை 3–ந்தேதி பாராளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.Related Tags :
Next Story