சென்னை தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு


சென்னை தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 3:45 AM IST (Updated: 9 Jun 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள், 3–வது நாளாக நேற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்களை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்தார். 3–வது நாளாக நேற்றும் வெவ்வேறு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு:–

திருப்பூர், நீலகிரி, கரூர்

திருப்பூர் மாவட்டம்– அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை தொகுதி), நடராஜ் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), குணசேகரன் (திருப்பூர் தெற்கு),

நீலகிரி மாவட்டம்– ராமு (குன்னூர்),

கரூர் மாவட்டம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கீதா (கிருஷ்ணராயபுரம்).

இந்த மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் என்பதால் இந்த சந்திப்புக்கு அவர் வரவில்லை.

நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி

நாமக்கல் மாவட்டம் – அமைச்சர் சரோஜா (ராசிபுரம்), சந்திரசேகர் (சேந்தமங்கலம்), பாஸ்கர் (நாமக்கல்), பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), அமைச்சர் தங்கமணி (குமாரபாளையம்),

கிருஷ்ணகிரி மாவட்டம் – அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்),

தர்மபுரி மாவட்டம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு),

இந்த மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. பழனியப்பன், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் என்பதால் இந்த சந்திப்புக்கு அவர் வரவில்லை.

கோவை, திருச்சி, தூத்துக்குடி

கோவை மாவட்டம் – கனகராஜ் (சூலூர்), அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), அம்மன் அர்ஜூனன் (கோவை தெற்கு), சண்முகம் (கிணத்துக்கடவு), துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), கஸ்தூரி வாசு (வால்பாறை),

திருச்சி மாவட்டம் – சந்திரசேகர் (மணப்பாறை), அமைச்சர் வளர்மதி (ஸ்ரீரங்கம்), அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு), பரமேஸ்வரி (மணச்சநல்லூர்), செல்வராசு (முசிறி),

தூத்துக்குடி மாவட்டம் – உமா மகேஸ்வரி (விளாத்திக்குளம்), சுந்தர்ராஜ் (ஒட்டப்பிடாரம்), அமைச்சர் கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) ஆகியோர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.


Next Story