அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது நாஞ்சில் சம்பத் பேட்டி


அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது நாஞ்சில் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2017 3:27 AM IST (Updated: 9 Jun 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டி.டி.வி. தினகரனை சென்னை பெசன்ட்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில்...

அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் கட்டுப்பாட்டில் தான் இன்றைக்கும் இருக்கிறது. அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அல்ல, சந்திக்காத எம்.எல்.ஏ.க்கள் சிந்தையிலும் டி.டி.வி.தினகரன் தான் இருக்கிறார். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதமான ஊனமும் வந்து விடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

இந்த சட்டமன்றத்துக்கு எவ்வளவு ஆயுள் என்று மக்கள் தீர்மானித்து இருக்கிறார்களோ? அவ்வளவு நாளும் இந்த ஆட்சியை கொண்டு செல்வதற்கு டி.டி.வி.தினகரன் முயற்சி எடுத்து இருக்கிறார்.

எனவே 2 மாதத்தில் தேர்தல் வரும் என்று, மைத்ரேயன் சொல்வதும், முதல்–அமைச்சர் பதவியை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு இருக்கிற மு.க.ஸ்டாலின் சொல்வதும் நடைபெறப்போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி மறந்தவர்

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் பேசி வருகிறார்களே?

பதில்:– அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் தான் பேசி வருகிறார். அவர் நன்றி மறந்து பேசுகிறார். நாகரிகம் இல்லாமல் பேசுகிறார். டி.டி.வி. தினகரனை ஒரு கிளை செயலாளர் கூட பார்க்க மாட்டார் என்று ஜெயக்குமார் சொன்னார். ஆனால் 32 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து இருக்கிறார்கள். இதற்கு ஜெயக்குமார் என்ன சொல்ல போகிறார்?.

அணிகள் இணையாது

கேள்வி:– சட்டசபை கூடும்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பார்களா? எதிராக செயல்படுவார்களா?

பதில்:– அரசு கவிழ்ந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

கேள்வி:– அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு நடக்குமா? ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனைகள் ஏற்கப்படுமா?

பதில்:– இரண்டும் நடக்காது.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story