மலேசியாவிற்குள் வைகோ நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
மலேசியாவிற்குள் நுழைய வைகோவிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் மதிமுக பொது செயலாளர் வைகோ பெயர் உள்ளது. இதனால் மலேசியா நாட்டுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அனுமதி மறுப்பை அடுத்து மலேசியாவில் இருந்து இன்று இரவே விமானம் மூலம் வைகோ திருப்பி அனுப்பப்படுகிறார்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
சகோதரர் வைகோவை விமான நிலையத்தில் தடுத்தது கண்டிக்கதக்கது. இந்திய வெளியுறவுத்துறை மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டிக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. வைகோவை கவுரவமாக நடத்த மத்திய அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story