ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதில் தெளிவான முடிவு வேண்டும் விஜயகாந்த் அறிக்கை


ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதில் தெளிவான முடிவு வேண்டும் விஜயகாந்த் அறிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2017 12:15 AM IST (Updated: 9 Jun 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. ஒருபுறம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், மறுபுறம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. ஒருபுறம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், மறுபுறம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. ஏற்கனவே அதிக வரி விதிப்பால் பலதரப்பினரும் இன்னலுக்கு ஆளாகி வரும்நிலையில், புதிய வரி என்பது மேலும் ஒரு சுமையாக மாறக்கூடும். ஓட்டல்களுக்கான 18 சதவீத வரி உயர்வு, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திரைப்படங்களுக்கு 28 சதவீத வரி உயர்வு, இத்தொழிலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். திருட்டு வி.சி.டி., ஆன்–லைனில் திரைப்படம் வெளியீடு போன்றவற்றில் முடங்கியிருக்கும் சினிமா தொழில், அதிகபட்ச வரிவிதிப்பால் இன்னும் பாதிக்கப்படும். எனவே சாதக பாதகங்களை உணர்ந்து தொழில் செய்வோர், வியாபாரிகள், ஏழை–எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் வரிவிதிப்பு விவகாரத்தில் தெளிவான முடிவை மத்திய அரசு எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘‘வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு மலேசிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Next Story