மலேசியாவில் வைகோ கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மலேசியாவில் வைகோ கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை,
மலேசியாவில் வைகோ கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக மத்திய அரசு தலையிடவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:-
வைகோ கைதுசெய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பினாங் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் இல்லத் திருமணத்திற்கு சென்றவரை “ஆபத்தானவர்” என்றெல்லாம் கூறி முறைப்படி விசா பெற்றுச் சென்றவரை மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும் அராஜக நடவடிக்கையுமாகும்.
கவுரவமாக நடத்தவேண்டும்
இந்தியப் பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஒரு அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அண்ணன் வைகோ கைது பற்றி மத்திய அரசும் உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது.
ஆகவே இந்திய வெளியுறவுத்துறை, மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து அண்ணன் வைகோவை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரை கவுரவமாக நடத்திடத்தக்க நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story