நல்லுறவு தேவை என்பதால்,தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம் - வெங்கய்யா நாயுடு


நல்லுறவு தேவை என்பதால்,தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம் - வெங்கய்யா நாயுடு
x
தினத்தந்தி 10 Jun 2017 1:16 PM IST (Updated: 10 Jun 2017 1:33 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

சென்னை

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சியை வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த பின் வெங்கய்யா நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக, காங்கிரஸ் குற்றச்சாட்டு தவறு. மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். நான் குடியரசு தலைவர் வேட்பாளர் பட்டியலில் இல்லை..குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story