இந்திய கல்வி மேம்பாட்டு கழக தலைவர் ஜி.விசுவநாதனுக்கு, ஜனாதிபதி பாராட்டு


இந்திய கல்வி மேம்பாட்டு கழக தலைவர் ஜி.விசுவநாதனுக்கு, ஜனாதிபதி பாராட்டு
x
தினத்தந்தி 11 Jun 2017 2:09 AM IST (Updated: 11 Jun 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

உயர் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் (எப்சி) தலைவராக வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளார்.

சென்னை,

ஜி.விசுவநாதன் தலைமையிலான இந்திய கல்வி மேம்பாட்டு கழக பிரதிநிதிகள் குழு சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை புதுடெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இந்தியாவில் தரமான உயர் கல்வி வளர்ச்சிக்காக இந்திய கல்வி மேம்பாட்டு கழகம் சிறப்பான பணி ஆற்றி வருவதற்காக பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு உதவியாக இருக்கும் வகையில் portalindia.org என்ற இணையதளத்தை தொடங்கியதற்காகவும், 2018–ம் ஆண்டில் ஒரு லட்சம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு படிப்பதற்காக அழைத்து வர திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்க செயல் என்றும் இந்திய கல்வி மேம்பாட்டு கழக தலைவர் ஜி.விசுவநாதன் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

‘உலக அளவில் முன்னணியில் உள்ள 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவேண்டும் என்பது தனது கனவு’ என்று அந்த குழுவிடம் பிரணாப் முகர்ஜி கூறினார். முன்னதாக ஜி.விசுவநாதன் ‘நமது நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த தேசிய அளவில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்று பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தினார்.


Next Story