கணவர் கொலை: போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்று பெண் புகார்


கணவர் கொலை: போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்று பெண் புகார்
x
தினத்தந்தி 11 Jun 2017 2:10 AM IST (Updated: 11 Jun 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த எஸ்.தமிழ்செல்வி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

சென்னை,

என் கணவர் சங்கரன்(வயது 52), கடந்த ஏப்ரல் 3–ந் தேதி பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகேசன், ஏகாம்பரம், ராமசாமி ஆகியோர் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், ஏகாம்பரத்தை போலீசார் பிடித்தனர். ஆனால், அவரை கைது செய்யவில்லை. அவரிடம் விசாரணை நடத்திவிட்டு விடுவித்து விட்டனர். இதுகுறித்து மடிப்பாக்கம் உதவி கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தேன். இதைதொடர்ந்து பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நடராஜன் பல்லாவரத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிவக்குமார் என்ற இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். அதன்பின்பும் விசாரணை முறையாக நடக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வேறொரு விசாரணை அமைப்பின் மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை வருகிற 16–ந் தேதி தாக்கல் செய்ய பள்ளிக்கரணை போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Next Story