உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தமிழக நுகர்வோர் இயக்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
சென்னை,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் உள்ள 3 பள்ளிகள், வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி ஆகியவை சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்)அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்றதாக கூறி மாணவர்களை தங்களது பள்ளியில் சேர்த்து வருகிறது. இந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அனுமதி பெறவில்லை.
ஆனால், சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்றதாக பத்திரிகை, உள்ளூர் டி.வி.க்களில் விளம்பரம் செய்து பெற்றோர்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்று கல்வி அதிகாரிகளிடம் விவரம் கேட்டு மனு கொடுத்தேன். அவர்களும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், மனுதாரர் குறிப்பிடும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்றுள்ளதா? அல்லது மாநில கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளதா? என்பது குறித்து அரசு வக்கீல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.