மீன்பிடி படகில் கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்


மீன்பிடி படகில் கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 13 Jun 2017 2:11 AM IST (Updated: 13 Jun 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வாணியக்குடி மீன்பிடி கிராமத்தை சேர்ந்த எர்னஸ்ட்டுக்கு சொந்தமான மீன்பிடி விசைபடகில் அவருடன் 13 மீனவர்களும் 8.6.17 அன்று கேரளாவின் கொச்சின் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

10.6.17 அன்று அவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது, மீன்பிடி விசைப்படகின் மீது சரக்குக் கப்பல் மோதியதில் அவ்விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த படகில் இருந்த 14 மீனவர்களும் கடலில் காயங்களுடன் தூக்கி எறியப்பட்டதில், 11 மீனவர்களை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி கிராமத்தை சேர்ந்த ஆன்டனி ஜான் என்பவரும், அசாம் மாநிலத்தை சார்ந்த மற்றொரு மீனவரும் இறந்துவிட்டனர். அசாம் மாநிலத்தை சார்ந்த காணாமல் போன இன்னொரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஆன்டனி ஜானின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரின் குடும்பத்திற்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story