சேகர் ரெட்டி மீதான வழக்கு 50 கிலோ தங்க கட்டிகள் முடக்கம் அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
சென்னையில் பிரபல காண்டிராக்டர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை,
சென்னையில் பிரபல காண்டிராக்டர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது ரூ.142 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத தங்க கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய அரசு புதிதாக வெளியிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.34 கோடி அளவிற்கு கைப்பற்றப்பட்டது.
177 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளும் சோதனையில் பிடிபட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசாரும் அமலாக்கப்பிரிவினரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து சேகர்ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஏற்கனவே வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்ட 6.5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அமலாக்கப்பிரிவினர் முடக்கி வைத்துள்ளனர்.
நேற்று மேலும் 50 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும்.
மேற்கண்ட தகவல்கள் அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story