அன்னிய செலாவணி மோசடி வழக்கு காணொலிக்காட்சி மூலம் சசிகலாவிடம் 21-ந்தேதி விசாரணை கோர்ட்டு உத்தரவு


அன்னிய செலாவணி மோசடி வழக்கு காணொலிக்காட்சி மூலம் சசிகலாவிடம் 21-ந்தேதி விசாரணை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் 21-ந்தேதி காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்துள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய காணொலிக்காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த கோர்ட்டு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது, கேட்கப்படும் கேள்விகளை தமிழில் முன்கூட்டியே வழங்கவேண்டும் என்று சசிகலா சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜாகீர்உசேன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.

21-ந்தேதி விசாரணை

ஏற்கனவே வழங்கிய உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் 21-ந்தேதி அன்று காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜாகீர்உசேன் நேற்று தெரிவித்தார்.

Next Story