அ.தி.மு.க. இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் பிரதமர் விருப்பம்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


அ.தி.மு.க. இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் பிரதமர் விருப்பம்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2017 11:24 AM IST (Updated: 14 Jun 2017 11:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார் என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போது தமிழக அரசியல் பற்றி விரிவாக பேசினோம். அப்போது பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தால்தான் வலுவான, நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று கூறினார்.
அதே சமயத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எத்தகைய சூழ்நிலையிலும் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்து விடக்கூடாது. அதில் கவனமாக இருங்கள் என்றார்.

ஊழல் நடப்பதாக தெரிய வந்தால் அதை அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் மோடி என்னிடம் கூறினார். இந்த விஷயத்தில் அவர் குரல் மிகவும் உறுதியாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்

Next Story