மானிய கோரிக்கை விவாதத்தில் அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் குரல் வாக்களிப்பு
மானிய கோரிக்கை விவாதத்தில் அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் குரல் வாக்களித்தனர்.
சென்னை
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்' குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என கோரினார். எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார். சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யபட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மசோதாவை தாக்கல் செய்தார்.சட்டசபையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
சரவணன் எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளியேற்றபட்டனர்.
இந்த பிரச்சினை நடந்து கொண்டுஇருந்த போது ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதி காத்தனர். ஓ.பன்னீர் செல்வம், சரவணன் உள்ளிட்டோரும் அமைதியாக இருந்தனர். எடப்பாடி பழனிசாமி பேசும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அமைதியாகவே இருந்தனர்.

Related Tags :
Next Story