‘கவர்னரிடம் முறையிடுவோம்’ சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேரம் குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து முறையிடுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இருந்து நேற்று தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அவமானத்துக்குரிய சம்பவம்
‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கில தொலைக்காட்சியில், மிகுந்த அவமானத்துக்குரிய ஒரு சம்பவம் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தபோது, யார் யாருக்கு எத்தனை கோடி ரூபாய் பரிமாறப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களான சரவணன் மற்றும் கனகராஜ் ஆகியோர் வெளிப்படையாக தந்திருக்கும் பேட்டிகளை அந்தத் தொலைக்காட்சியானது தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
அதுபற்றி சட்டமன்றத்தில் பேச வேண்டும் என நான் அனுமதி கேட்டபோது, சபாநாயகர், ‘நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு பற்றி பேசக்கூடாது’ என்று சொல்லி பேசுவதற்கு திட்டவட்டமாக அனுமதியளிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு எங்களை எல்லாம் குண்டு கட்டாக அவையில் இருந்து வெளியேற்றினார்கள். அதனைக் கண்டிக்கும் வகையில் நாங்கள் கோட்டைக்கு வெளியில் சாலை மறியலில் ஈடுபட்டோம்.
சபாநாயகர் அனுமதி மறுப்பு
மீண்டும் இந்தப் பிரச்சினையை பேரவையில் எழுப்புவோம் என்று நேற்றைக்கே நான் சொல்லியிருந்தேன். அதன்படி, இன்றைய தினம் காலையில் சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து பேச நான் முயற்சித்த நேரத்தில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். ‘நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என்று இந்தப் பிரச்சினைக்கு நேற்றே தீர்ப்பு சொல்லிவிட்டேன். எனவே இப்போதும் அனுமதிக்க முடியாது’ என்று சபாநாயகர் உறுதியாக சொல்லிவிட்டார்.
உடனே நான் எழுந்து, “சட்டப்பேரவை விதி 92 (1)-ன் கீழ், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கில் கருத்துகளை சொல்லக்கூடாது, என்று இருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினையை பொறுத்தவரையில், சென்னை ஐகோர்ட்டில் 16-ந் தேதி, வெள்ளிக்கிழமை அன்றுதான் தான் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வந்துள்ள செய்திகளை அடிப்படையாக வைத்து, தொடரப்பட்டுள்ள வழக்கை எடுத்துக்கொள்வதா?, வேண்டாமா? என்று முடிவு தெரிய வரும். அதற்கிடையில் இதுபற்றி சட்டமன்றத்தில் பேசுவதில் எந்தத் தவறும் கிடையாது. எனவே, இதுகுறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும்” என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்.
ஆனால், சபாநாயகர் எங்களை பேச திட்டவட்டமாக அனுமதி மறுத்துவிட்டார். எனவே, அதனை கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
தலைகுனிவு
கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் இதுகுறித்து, ‘எனது குரல் இல்லை, அது நானில்லை’, என்று மாறி மாறி சொல்லும் நிலையில், அந்த தொலைக்காட்சி அவர்கள் பேசியிருப்பதை நிரூபிக்கத் தயார் என்று அறிவித்தும், அரசு ஏன் பேச அனுமதி மறுக்கிறது?.
பதில்:- இதைத்தான் சட்டமன்றத்தில் கேட்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால், சபாநாயகர் பேசவே அனுமதி மறுக்கிறார். இதில் பிரச்சினை என்னவென்றால், இதுகுறித்து பேசினால், தார்மீகப் பொறுப்பேற்ற இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம், அந்தப் பிரச்சினை தொடர்பான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களது கேள்விக்கும், வெளியில் உலவிவரும் பயங்கரமான அந்த செய்திகள் குறித்து அவையில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பை சபாநாயகர் உருவாக்கித்தர வேண்டும். இல்லையென்றால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டு, தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால், இவற்றை எல்லாம் நாங்கள் அவையில் எழுப்பி பேசிவிடுவோம் என்பதால் தான் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்க மறுக்கிறார்.
உண்மையில், இது எங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையல்ல. தமிழக சட்டப்பேரவைக்கு ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய வகையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பலகோடி ரூபாய்கள் பேரம் பேசியிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றபோது, அது தமிழ்நாட்டுக்கே மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனநாயகத்துக்கே இது மிகப்பெரிய அவமானமாக அமைந்திருக் கிறது.
கவர்னரிடம் முறையிடுவோம்
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம் நடந்திருப்பது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவீர்களா?.
பதில்:- இன்றைக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.க. அவையில் இருக்கிறது. இதுபற்றி அவையில் பேசவில்லை என்றால் மக்கள் காரித் துப்புவார்கள். ஆனால், சபாநாயகர் யாரும் பேச அனுமதிக்க மறுக்கிறார். கவர்னரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். தற்போது அவர் ஊரில் இல்லை. அவர் வந்து நேரம் கொடுத்தால், இதுகுறித்து முறையிடுவோம்.

Related Tags :
Next Story