மத்திய அரசுக்கு பரிந்துரைக்காவிட்டால் தொடர் போராட்டம் மக்கள் இயக்கம் அறிவிப்பு
எய்ம்ஸ் மருத்துவ மனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான மக்கள் இயக்கம் அறிவித்து உள்ளது.
சென்னை,
எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இயக்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்தநிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மடீட்சியா முன்னாள் தலைவரும், மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மணிமாறன் தலைமை தாங்கினார். மடீட்சியா தலைவர் முராரி வரவேற்றார். அ.தி.மு.க. எம்.பி. கோபாலகிருஷ்ணன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர் போராட்டம்
எம்.எல்.ஏ.க்கள் பழனிவேல் தியாகராஜன்(மதுரை மத்திய தொகுதி), சரவணன்(மதுரை தெற்கு தொகுதி), மாணிக்கம்(சோழவந்தான்), நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், மடீட்சியா கவுரவ செயலாளர் முருகன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
அதன்பின்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஏற்கனவே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் தென்மாவட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் வளர்ச்சி பெறும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தோப்பூர் நான்கு வழிச்சாலையில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்’.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story