நாட்டின் பாதுகாப்பில் எத்தகைய சவால்களையும் வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும் கடற்படை அதிகாரி பேச்சு
நாட்டின் பாதுகாப்பில் எத்தகைய சவால்களையும் வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என கடற்படை அதிகாரி முகுல் அஸ்தானா கூறினார்.
வேலூர்
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்கு உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 88–வது குழுவுக்கான ஹெலிகாப்டர் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட கடற்படை அதிகாரி (ரியர் அட்மிரல்) முகுல் அஸ்தானா பயிற்சியை நிறைவு செய்த 11 கடற்படை வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் கமாண்டன்ட் ராகுல் வர்மாவிற்கு கேரள கவர்னரின் சுழற்கோப்பையையும் வழங்கினார்.
இரவு, பகலாக பாதுகாப்பு பணி
பின்னர் முகுல் அஸ்தானா பேசியபோது கூறியதாவது:–
இந்திய கடற்படை மிகவும் வலிமை பெற்றதாக திகழ்ந்து வருகிறது. ஏராளமான வீரர்கள் இரவு, பகலாக விழிப்புடன் செயல்பட்டு எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியிலும் உங்களின் தனித்திறமையை காட்டி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போர் விமானங்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது ‘இந்திய கடற்படைக்கு 8 ‘பி 8 ஐ’ போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் கடற்படையில் உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
முன்னதாக வீரர்களின் அணிவகுப்பின்போது வானில் 3 ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டபடி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமானதள அதிகாரிகள், வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story