ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2017 4:30 AM IST (Updated: 18 Jun 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,
 
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை பட்டியலை ரத்து செய்ய ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக அரசு தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலே அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.  இதில் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story