குதிரை பேர ஆட்சியை அகற்ற அணி திரள்வோம் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் அழைப்பு
குதிரை பேர ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்ற அணி திரள்வோம் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். இது அப்பட்டமாக அம்பலப்பட்டுவிட்டது. கூவத்தூர் முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே, அங்கே தாங்கள் எந்தளவுக்கு விலை பேசப்பட்டோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது வீடியோ காட்சிகளாக வெளியான பிறகு வேறென்ன ஆதாரம் வேண்டும்? ஆனால், தன்மான உணர்வு சிறிதுமில்லாத அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் தார்மீக அடிப்படையில் கூட ராஜினாமா செய்ய முன் வரவில்லை. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவும் வாய் திறக்கவில்லை.
ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்பது வாக்குரிமை. அதனைப் பெற்று ஆட்சி அமைத்தவர்கள், மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளை, ஏலம் விடுவது போல, கூவத்தூர் முகாமில் 2 கோடி, 4 கோடி, 6 கோடி என குதிரை பேரம் நடத்தியிருப்பதைக் கண்கூடாகக் கண்ட பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. பேரவையில் இதுகுறித்து எதிர்கட்சி என்ற முறையில் தி.மு.க. கேள்வி எழுப்பி, விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திய போதும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
இங்கே நடப்பது சாதனை ஆட்சியல்ல, சமாளிப்பு ஆட்சி. இதனை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது.
ல்லாவற்றையும் விட, மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகத்தான சக்தி. அந்த மக்கள் சக்தி, தி.மு.க.விற்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த குதிரை பேர ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்ற அணி திரள்வோம். மக்கள் விரும்பும் தி.மு.க. அரசை ஜனநாயக நெறிமுறைகளின்படி விரைந்து அமைக்க சூளுரைப்போம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story