பாலாற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
பாலாற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 108-வது பிறந்தநாள் விழா நடந்தது. மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவபடத்திற்கு கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை உடைத்து கட்சியையும், ஆட்சியையும் மத்திய பா.ஜ.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. பா.ஜ.க. என்னதான் திட்டம் போட்டாலும் தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியாது.
பாலாற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு எடுத்து சென்று ஆந்திர அரசின் செயல்பாட்டை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story