திட்டமிட்டபடி நாளை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் அபிராமி ராமநாதன் அறிவிப்பு


திட்டமிட்டபடி நாளை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் அபிராமி ராமநாதன் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2017 7:41 PM IST (Updated: 2 July 2017 7:41 PM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்டபடி நாளை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வந்ததால், சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

இதுபற்றி ஆலோசிக்க திரையுலகை சேர்ந்தவர்களின் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அடங்கிய கூட்டு கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியார்களிடம் கூறியதாவது:

திட்டமிட்டபடி நாளை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும்.  தமிழக அரசு தன்னுடைய நிலைபாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. ஜிஎஸ்டி வரியை நாங்கள் எதிர்க்கவில்லை, மாநில வரியை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story