2017–2018–ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்
2017–2018–ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.
சென்னை,
சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:–
2015–2016–ம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், 2017–2018–ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.
பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, மத்திய அரசு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன் வாயிலாக, 2017–2018–ம் ஆண்டில் 2,659 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மற்றும் 25 உயர்மட்டப் பாலங்கள் 1,254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story