போலீஸ் சங்கம் அமைக்கக் கோரி சென்னையில், 6–ந்தேதி போராட்டம் நடக்குமா?
இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணித்து தடுத்து நிறுத்தவேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை,
போலீசாருக்கு சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை(வியாழக்கிழமை) தலைமை செயலகத்துக்கு பேரணியாக சென்று முதல்–அமைச்சரை சந்தித்து மனு கொடுப்போம் என்று போலீஸ் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
‘வாட்ஸ்–அப்’பிலும் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல போலீசார் திரண்டு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து தகவல் பரவியுள்ளது.
இதற்கிடையில் நாளை முதல் 3 நாட்கள் சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களும் விடுமுறை எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே 6–ந்தேதி போலீசார் பேரணி நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story