”அகஸ்தியர் மலை” உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ சான்றிதழ் வழங்கியது


”அகஸ்தியர் மலை” உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ சான்றிதழ் வழங்கியது
x
தினத்தந்தி 5 July 2017 3:20 PM GMT (Updated: 2017-07-05T20:50:11+05:30)

”அகஸ்தியர் மலை” உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.

சென்னை,

ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உறுப்பினர்கள் கூட்டம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த மார்ச் மாதம்  21-ம் தேதி, 2016 ஆண்டு நடைபெற்றது.  இதில் உலக உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் புதிதாக 20 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் பரந்து விரிந்துள்ள அகஸ்தியர் மலையும் இடம்பெற்றது.  அகஸ்தியர் மலை உலக உயிர்க்கோள் காப்பகமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள நீலகிரி, மன்னார் வலைகுடா, சுந்தரவன காடுகள், நிகோபார் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அகஸ்தியர் மலையில், 1,600 மீட்டர் முதல் 5,200 மீட்டர் உயரம் கொண்ட 26 சிகரங்கள் உள்ளன, தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இங்கு உலகின் மிகத் தொன்மையான ’கண்ணிக்காரன்’ என்ற பழங்குடியினத்தவர்கள் 3,000 பேர் வாழ்ந்து வருகின்றனர், மேலும், 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும், பல அரிதான காட்டு மிருகங்களின் வாழ்விடமாகவும் அகஸ்தியர் மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகஸ்தியர் மலை உலக உயிர்க்கோள் பாதுகாப்பு பகுதி என யுனஸ்கோ சான்றிதழ் வழங்கி உள்ளது.  சான்றிதழை வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் யுனஸ்கோ அமைப்பு சென்னையில் வழங்கியது.

Next Story