மது இல்லாத தமிழகம் ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை - பன்னீர்செல்வம்


மது இல்லாத தமிழகம் ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை  - பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 7 July 2017 9:34 PM IST (Updated: 7 July 2017 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலை.க்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. கதிராமங்கலத்தில் கைதானவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற்று, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிடுங்கள். மது இல்லாத தமிழகத்தை படிப்படியாக உருவாக்குவோம் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.  கதிராமங்கலத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story