தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இமாச்சலபிரதேசத்தின் உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்களின் முன்னாள் இயக்குனர் சுதா தேவி, தமிழ்நாடு பணிக்கு அனுப்பப்படுகிறார். தமிழக சமுதாய பாதுகாப்பு திட்டங்கள் இயக்குனராக அவர் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிரன் குராலா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளர் லட்சுமி பிரியா, அரியலூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஜெ.இன்னொசண்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






