அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேட்டி


அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2017 7:17 PM IST (Updated: 8 July 2017 7:16 PM IST)
t-max-icont-min-icon

அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறினார்.

தஞ்சை,

ஐ.ஏ.எஸ்  சகாயம் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதில் வீணாக கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைமை பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டுக்கும், அரசுக்கும் வழங்கிவிட்டேன். இனி நீதிமன்றம், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story