வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் நிர்மலா சீதாராமன் கேள்வி

வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால்  நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் நிர்மலா சீதாராமன் கேள்வி
x
தினத்தந்தி 9 July 2017 8:00 AM GMT (Updated: 2017-07-09T13:30:14+05:30)

வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என கேள்வி எழுப்பினார்.

சென்னை,

நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரி  ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய மந்திரி  நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

இட்லி மாவு, செங்கல் உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு குறைத்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். 

அரசு வருமானத்தை அதிகரிக்க  ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. மாநில அமைச்சர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. 

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு. தமிழக தொழில்துறை நலன்களையும் கருத்தில் கொண்டு தான் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. 

வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால்  நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என கேள்வி எழுப்பினார்.

Next Story