டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை ஏற்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை செயலர்
டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
ஓசூரில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியார்களிடம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story