சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
x
தினத்தந்தி 9 July 2017 8:31 PM IST (Updated: 9 July 2017 8:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகிறார்கள். சில கிராமங்களில் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகிறார்கள். சில இடங்களில் கலங்கலான நீர் குடிக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை,  சென்னை எழும்பூர், கிண்டி, சூளைமேடு,நுங்கம்பாக்கம்,கிண்டி, தி.நகர்  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.  

Next Story