பெண் வக்கீலுடன் பழகியதால் ஆத்திரம்; என்ஜினீயரை வெட்டிக்கொன்று காருடன் கல்குவாரி குட்டையில் தள்ளினர்

பெண் வக்கீலுடன் பழகியதால் என்ஜினீயர் வெட்டிக்கொல்லப்பட்டு உடல், காருடன் கல்குவாரி குட்டையில் தள்ளப்பட்டது. சுமார் 1½ மாதத்துக்கு பிறகு காருடன் பிணத்தை போலீசார் மீட்டனர்.
நெல்லை
தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 47). கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு நீண்ட காலமாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
முத்துகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் விவாகரத்து பெற முயற்சி செய்தனர். விவாகரத்து தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வக்கீலை முத்துகிருஷ்ணன் அடிக்கடி சந்திந்து வந்தார்.
வக்கீல் அலுவலகத்துக்கு வந்து சென்றபோது அங்கு பணிபுரிந்த பெண் வக்கீலுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பெண் வக்கீல், ராஜகோபாலின் காதல் மனைவி ஆவார். அவரை சந்திப்பதற்காகவே அடிக்கடி முத்துகிருஷ்ணன் வந்து சென்றுள்ளார். தனது காதல் மனைவியிடம் முத்துகிருஷ்ணன் நெருக்கம் காட்டி வருவதை அறிந்த ராஜகோபால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். முத்துகிருஷ்ணனை அழைத்து அவர் கண்டித்தார். ஆனாலும் அந்த பெண் வக்கீலுடனான தொடர்பை துண்டிக்காமல் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து அவரை சந்தித்து வந்துள்ளார்.
கடந்த மே மாதம் 19-ந்தேதி முத்துகிருஷ்ணனுக்கும், ராஜகோபாலுக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகோபாலை முத்துகிருஷ்ணன் தாக்கி உள்ளார். தனது காதல் மனைவி முன்னிலையில் தன்னை முத்துகிருஷ்ணன் தாக்கியதில் ராஜகோபால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். இனிமேலும் விட்டுவைக்க கூடாது என்று முடிவு செய்த ராஜகோபால், முத்துகிருஷ்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தார்.
இந்த நிலையில் மே மாதம் 22-ந்தேதி முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டை வருவதை அறிந்த ராஜகோபால், தனது நண்பர்கள் 3 பேருடன் கே.டி.சி. நகர் பகுதியில் நின்று கொண்டு அவரது வருகைக்காக காத்து இருந்தார். அவர் வந்ததும், அவருடைய காரில் ராஜகோபாலும், அவரது நண்பர்களும் ஏறினர். காரை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து முத்துகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் வைத்து கட்டி, காரில் வைத்து தாழையூத்து அருகே உள்ள பாப்பாக்குளத்தில் தண்ணீர் தேங்கி கிடந்த கல்குவாரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை காருடன் தள்ளி விட்டனர். பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜகோபாலை போலீசார் கைது செய்தனர். அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் விவகாரத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் காருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story