அமர்நாத் பக்தர்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


அமர்நாத் பக்தர்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 July 2017 12:30 AM IST (Updated: 11 July 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் பக்தர்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு பக்தர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அமர்நாத் பக்தர்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 போலீசார் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது:–

அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் வெறுக்கத்தக்கதாகும். கோழைகள் அப்பாவி பக்தர்கள் மீது தாக்கி இருக்கிறார்கள். அந்த இதயமற்றவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story