அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு


அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 12 July 2017 11:17 AM GMT (Updated: 2017-07-12T16:47:22+05:30)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தல் வருகிற 17-ந்தேதி  நடக்கிறது.  ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் மீராகுமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும்  இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஆதரவு தெரித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல்  தொடர்பாக ஆலோசனை நடத்த  அ.தி.மு.க எம்.பிக்கள் தலைமை செயலகம் வருகை தந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் , வேணு கோபால், மரகதம், நவநீத கிருஷ்ணன் உள்பட எம்.பிக்கள் கலந்து கொண்டனர். 

Next Story