கதிராமங்கலம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப எம்.பிக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை


கதிராமங்கலம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப எம்.பிக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
x
தினத்தந்தி 12 July 2017 5:36 PM IST (Updated: 12 July 2017 5:36 PM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப எம்.பிக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தல் வருகிற 17-ந்தேதி  நடக்கிறது.  ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் மீராகுமாரும் வேட்பாளர்களாக   
நிறுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும்  இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஆதரவு தெரித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல்  தொடர்பாக ஆலோசனை நடத்த  அ.தி.மு.க எம்.பிக்கள் தலைமை செயலகம் வருகை தந்தனர். அவகர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் , வேணு கோபால், மரகதம், நவநீத கிருஷ்ணன் உள்பட எம்.பிக்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சருடன்,எம்.பிக்கள் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு. குடியரசுத் தலைவர் தேர்தல்,கதிராமங்கலம் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதிராமங்கலம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப எம்.பிக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். ஜிஎஸ்டி  யில் தமிழக சந்திக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப  பழனிசாமி வலியுறுத்தினார்.

Next Story