தமிழகத்தில் செல்போனில் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்

சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2.7 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய மின்கட்டணத்தை கணினி மயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு இ–சேவை மையங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் செலுத்தி வருகின்றனர். தற்போது புதிதாக செல்போன் ‘ஆப்’ (கைபேசி செயலி) மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை செல்போனில் கூகுள் பிளே–ஸ்டோருக்கு சென்று tangedco app, என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதன்மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். பின்னர் எஸ்.எம்.எஸ். மூலம் உறுதிப்படுத்தப்படும். இந்த திட்டத்தை தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக எரிசக்தித்துறை செயலாளர் விக்ரம் கபூர், மின்சார வாரிய தலைவர் எம்.சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story