ஜி.எஸ்.டி. வரி கருத்து இருந்தால்: கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் சட்டசபையில் அமைச்சர் தகவல்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாறுபட்ட கருத்து இருந்தால் தெரிவிக்கலாம் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற வணிக வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் ராமர் (குளித்தலை தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் ராமர்:- ஜி.எஸ்.டி. வரி ஒரு வரமாக இருக்கலாம். ஆனால், நமக்கு சாபமாக இருக்கக்கூடாது.
அமைச்சர் கே.சி.வீரமணி:- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது மத்திய அரசு தான். மாநில அரசு கிடையாது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- எங்களது உறுப்பினர் அரசுக்கு நினைவுபடுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூறினார். கடந்த 2 நாட்களாக வாட்ஸ்-அப்பில், ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக ஒரு கருத்து வந்து கொண்டிருக்கிறது. அதாவது, வியாபாரி ஒருவர் கூறுவது போன்று அது உள்ளது. “கடை என்னுடையது, உழைப்பு என்னுடையது, முதலீடு என்னுடையது, திறமை என்னுடையது. ஆனால், வேலை செய்யாத உங்களுக்கு (அரசுக்கு) 28 சதவீத வரி செலுத்த வேண்டுமா?. வேண்டுமென்றால், எனக்கு கிடைக்கும் லாபத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு, உங்களுக்கு கிடைக்கும் வரியை எனக்கு கொடுத்துவிடுங்கள்” என்பது தான் அது.
அமைச்சர் ஜெயக்குமார்:- ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 169 பொருட்களுக்கு அதில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பில் வந்த தகவலை எதிர்க்கட்சி தலைவர் இங்கே குறிப்பிட்டார். அதில், கேலியும், கிண்டலும் தான் இப்போது வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாறுபட்ட கருத்து இருந்தால் அதை தெரிவிக்கலாம் என்று மத்திய மந்திரி கூறியிருக்கிறார். மாதந்தோறும் முதல் வாரம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடுகிறது. அந்த கூட்டத்தில் வணிகர்களின் கருத்துகள் வலியுறுத்தப்படும்.
உறுப்பினர் ராமர்:- பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நிலம் வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அமைச்சர் கே.சி.வீரமணி:- பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதால், எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அரசுக்கு வருமானம் அதிகரித்தால், பதிவுக்கட்டணம் குறைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story