ஜி.எஸ்.டி.யை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது ஏன்? சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே காரசார விவாதம்
ஜி.எஸ்.டி.யை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது ஏன்? என்பது பற்றி சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
சென்னை,
தமிழக சட்டசபையில் வணிகவரி, முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. (ஆற்காடு) ஈஸ்வரப்பன் பேசும்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஈஸ்வரப்பன்:- மற்ற நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி 0 முதல் உயர்நிலை என்ற இரண்டு வகை வரி விதிப்பு என்ற அளவில்தான் உள்ளது. ஆனால் இந்தியாவில்தான் ஜி.எஸ்.டி. 0 சதவீதம், 5, 12, 18, 28 சதவீதம் என்று 5 வகைகளில் விதிக்கப்படுகின்றன. முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில்தான் ஜி.எஸ்.டி. உள்ளது.
ஜி.எஸ்.டி. வரியை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவர் பெயரைச் சொல்லி அரசை நடத்தும் நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்?
இழப்பு ஈடுகட்டப்படும்
அமைச்சர் கே.சி.வீரமணி:- இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 26 மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யை ஏற்றுக்கொண்டன. அதில் இணையாவிட்டால் ஏற்படும் பாதிப்பு, சிரமங்களை கருத்தில் கொண்டுதான் ஜி.எஸ்.டி.யை ஏற்றிருக்கிறோம்.
ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா எதிர்க்கவில்லை. அதில் திருத்தங்கள் வேண்டும் என்றுதான் கேட்டார். ஜி.எஸ்.டி.யால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தி வரி
ஈஸ்வரப்பன்:- உற்பத்தியில் ஒரு மாநிலத்தில் பெறப்பட்ட வரி, ஜி.எஸ்.டி.யால் அந்த மாநிலத்துக்கு கிடைப்பதில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் பொருள் உற்பத்தி செய்யப்பட்டு குஜராத் மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அதற்கான வரி குஜராத் மாநிலத்துக்கு சென்றுவிடுகிறதே தவிர, தமிழகத்துக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.
அமைச்சர் கே.சி.வீரமணி:- இதில் சில வித்தியாசங்கள் உள்ளன. ஆனாலும் தமிழகத்தில் உற்பத்தி மட்டுமல்லாமல், விற்பனையும் அதிகம் நடைபெறும் மாநிலம். எனவே, இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது.
கடலை மிட்டாய்
ஈஸ்வரப்பன்:- நிதி இழப்பு பற்றி ஆய்வு செய்யாமல் ஜி.எஸ்.டி.யை ஏற்றுக்கொள்ளலாமா?
அமைச்சர் கே.சி.வீரமணி:- தி.மு.க. ஆட்சி காலத்தில் வாட் வரி அமல் செய்யப்பட்டது. அப்போது என்ன நடந்தது? வாட் வரி அமலாக்கத்தினால் ஏற்படும் இழப்பை நீங்கள் பெறவில்லையே. இப்போது இழப்பைப் பெறுவதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.யில் மற்ற மாநிலங்கள் இணையும்போது நாம் மட்டும் தனியாக நிற்க முடியாது. எனவேதான் அதில் இணையும் நிலை ஏற்பட்டது.
ஈஸ்வரப்பன்:- நிதி ஈட்டும் வட்டிக்கடை போல அரசு செயல்படக்கூடாது. யார் இணைந்தாலும், இணையாவிட்டாலும், நமது வீடான தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதில் இணையக்கூடாது. கடலை மிட்டாய்க்குக் கூட வரி விதிக்கப்படுகிறது. அதை நீக்க வேண்டும்.
அமைச்சர் கே.சி.வீரமணி:- இதுசம்பந்தமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைப்போம்.
அரசியல் சாசனம் திருத்தம்
ஈஸ்வரப்பன்:- வாட் வரி விதிப்புக்கு முன்பு 28 வணிகர் சங்கங்களை அழைத்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- வாட் வரியை ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக எதிர்த்தார். வர்த்தகர்களும் எதிர்த்தனர். ஒரே நாடு ஒரே வரி விதிப்பு என்ற அளவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே, அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
ஜி.எஸ்.டி. கடன் கிடைக்குமா?
ஈஸ்வரப்பன்:- பல பொருட்கள் அடங்கிய பார்சலை வாங்கினால், அதில் எந்தப் பொருளுக்கு அதிக வரி உள்ளதோ, அதே வரிதான் அதிலுள்ள மற்ற பொருட்களுக்கும் விதிக்கவேண்டும் என்று ஜி.எஸ்.டி. கூறுகிறது.
திருமணத்துக்காக கட்டில், பீரோ போன்ற பொருட்களை பொதுவாக ரூ.3 லட்சம் வரை வாங்குவார்கள். ரூ.3 லட்சத்துக்கு பொருள் வாங்கினால் ரூ.90 ஆயிரம் வரை ஜி.எஸ்.டி. கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கார் கடன், வீட்டுக்கடன் என்பதுபோல் ஜி.எஸ்.டி. கடன் என்று கொடுத்தால் நல்லது.
பீடி, பட்டாசுத் தொழில் ஏற்கனவே நசுக்கப்பட்டு வருகிறது. சீனப் பட்டாசுகளின் வரவினால் இன்னும் பட்டாசுத் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அதன் மீது மேலும் 28 சதவீதம் வரி விதித்தால் பட்டாசுத் தொழில் முழுமையாக நசுங்கிவிடும்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- சீனப் பட்டாசுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. எனவே, அதுபற்றி அச்சப்படத் தேவையில்லை.
ஏன் வெளியேறவில்லை?
ஈஸ்வரப்பன்:- ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கார்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடன் அப்படியே உள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் குறைகளை மாநில அரசுகள் சொன்னாலும், அங்கு மத்திய அரசின் கைதான் ஓங்கி இருக்கிறது. பாராளுமன்ற அவைகளிலும் அதுபற்றி விவாதிக்க முடியாது, மாநில அரசுக்கும் வரி தொடர்பாக சட்டம் இயற்ற உரிமை கிடையாது என்கிறபோது, மத்திய அரசின் போக்கு அதிகமாக இருக்கிறது.
அமைச்சர் கே.சி.வீரமணி:- ஜி.எஸ்.டி.யை எதிர்த்து பாராளுமன்றத்தில் இருந்து நாங்கள் (அ.தி.மு.க.) வெளியேறியபோது, நீங்கள் (தி.மு.க.) மட்டும் ஏன் அமர்ந்திருந்து அதற்கு ஆதரவு தெரிவித்தீர்கள்?
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story