பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கும் அரசு நிவாரண உதவி தி.மு.க. உறுப்பினர் புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கும் அரசு நிவாரண உதவி தி.மு.க. உறுப்பினரின் புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
பெண் தொழிலாளர்கள்
உறுப்பினர் சீனிவாசன்:- தமிழகத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் அதிகம் வஞ்சிக்கப்படுகிறார்கள். குறைந்த அளவு சம்பளமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள தொழிற்சாலைகளில் 65 சதவீதம் அளவுக்கு நூற்பாலைகள் உள்ளன. பஞ்சாலைகளில் 2½ லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், பாதி அளவு பெண்கள் இருக்கின்றனர். தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு கொத்தடிமைகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
அமைச்சர் நிலோபர் கபில்:- தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.330.60 என்று அரசு ஊதியம் உயர்த்தி 1-4-2017 முதல் வழங்கப்படுகிறது.
அரசு நிதி வழங்க வேண்டும்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவந்து அடைக்கப்படுவதாக உறுப்பினர் சொல்கிறார். அரசு ஆலையா?, தனியார் ஆலையா? என்பதை அவர் சொல்லவில்லை. எந்த ஆலை என்பதை அவர் குறிப்பிட வேண்டும்.
உறுப்பினர் சீனிவாசன்:- சிவகாசி பட்டாசு ஆலைகளில் இப்போது ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சீனப் பட்டாசு வருகைதான் அதற்கு காரணம். அவர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் நிலோபர் கபில்:- பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் தெரிவிக்கிறார். பேச்சுவார்த்தை நடத்தி 6-7-2017 அன்று வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 7-7-2017 முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு செல்கிறார்கள்.
உறுப்பினர் சீனிவாசன்:- பட்டாசு விபத்தில் இறப்பவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்துக்கு அரசும் நிதி வழங்க வேண்டும்.
நிவாரண உதவி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பட்டாசு விபத்தில் இறப்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறுப்பினர் இங்கே குறிப்பிடுகிறார். அண்மையில், சாத்தூர், விருதுநகர் வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சீனிவாசன்:- அரசு ரூ.1 லட்சம் வழங்குகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். திருச்சி தனியார் ஆலை வெடி விபத்தில் 19 பேர் மரணம் அடைந்தனர். நிறைய பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை.
அமைச்சர் நிலோபர் கபில்:- வெற்றிவேல் பிரைவேட் லிமிடெட் என்ற வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 19 பேர் மரணம் அடைந்தனர். மரணம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆலை நிர்வாகம் சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2½ லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். விபத்து ஏற்பட்டவுடன் அந்த மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு:- திருச்சி மாவட்டம் - சேலம் மாவட்டம் இடையே அந்த வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கழிவுநீரை ஆழ்துளை போர்வெல் குழாயுக்குள் விடுகிறார்கள். இதனால், அப்பகுதியில் உள்ள பாக்கு மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story