தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஆவணங்கள் உண்மையானது தம்பிதுரை சொல்கிறார்


தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஆவணங்கள் உண்மையானது தம்பிதுரை சொல்கிறார்
x
தினத்தந்தி 15 July 2017 12:59 PM IST (Updated: 15 July 2017 12:59 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணைத்தில் வழங்கிய ஆவணங்கள் உண்மையானது என தம்பிதுரை கூறிஉள்ளார்.

சென்னை

 சென்னை விமான நிலையத்தில்  துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று அ.தி.மு.க. தலைமை கழகமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முடிவெடுப்பார்கள். சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் தவறானது என எதிர் அணியின் மைத்ரேயன் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தலைமைக் கழகமும் தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஆவணங்கள் உண்மையானது. எங்களுடைய ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் முழு பலம் உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எங்கள் அணியின் பக்கம் தான் இருக்கிறார்கள்.

அதற்கான ஆவணங்கள் தான் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்கை இழுத்தடித்து தேர்தல் ஆணையத்தை தாமதப்படுத்தலாம் என்றும், இரட்டை இலை  சின்னம் எங்களுக்கு கிடைப்பதை தாமதப்படுத்தவும் சிலர் சதி செய்கின்றனர்.

தங்களுக்குத் தான் ஆதரவு இருக்கிறது என்று மக்களிடம்  தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் எதிரணி என்பதால் தான்  அப்படி சொல்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story