ரூ.10 கோடி வாங்கியதாக புகார் சம்பந்தபட்டவர்களுக்கு தமிமுன் அன்சாரி நோட்டீஸ்


ரூ.10 கோடி வாங்கியதாக புகார் சம்பந்தபட்டவர்களுக்கு   தமிமுன் அன்சாரி நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 July 2017 4:39 PM IST (Updated: 15 July 2017 4:38 PM IST)
t-max-icont-min-icon

ரூ.10 கோடி வாங்கியதாக புகார் தொடர்பாக சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளதாக தமிமுன் அன்சாரி கூறினார்.

சென்னை

ஓபிஎஸ் அணியில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரத்தில் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாக சரவணன் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.   நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள். எங்கள் மீது இது போன்ற அழுக்கான குற்றச்சாட்டுகளை கூறி உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள். எந்த பண பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை. தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நாங்கள் ஆதரவு தந்தோம். வீடியோ தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார்.

இந்த நிலையில் தந்தி டிவிக்கு தமிமுன் அனசாரி பேட்டி அளித்தார். அப்போது பணம் பெற்றதாக கூறிய சரவணன் எம்.எல்.ஏ மற்றும் அதனை   ஒளிபரப்பிய டிவிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது. இது வரை பதில் இல்லை. அடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறினார்.



Next Story