துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காதவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகிறார்-தமிழிசை சௌந்தரராஜன்


துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காதவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகிறார்-தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 16 July 2017 11:03 PM IST (Updated: 16 July 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

கமலஹாசன் கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காதவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகின்றார் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன் திரைத்துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தால் போதும், அரசியலை பின்பு பாக்கலாம். கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காதவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகின்றார். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்றதில் தலையிடுகிறார். திரைப்படத்துறையில் கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்வதில் கமல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story